மதுரை-திருநங்கைகளின் காளைகளுக்கு வாடிவாசலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மதுரை பொட்டப்பனையூர் பகுதி திருநங்கைகள் கீர்த்தனா, ஐஸ்வர்யா மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது: பொட்டப்பனையூர், மதிச்சியம், குலமங்கலம், பனங்காடி, எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் திருநங்கைகள் 15 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறோம். கடந்தாண்டு காளைகளை அவிழ்த்து விட ஆன்லைனில் பதிவு செய்திருந்தோம். டோக்கன் பெற்றும் வாடிவாசலில் அவிழ்க்க முடியவில்லை.
இந்தாண்டும் ஆன்லைனில் பதிவு செய்து விட்டோம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் தலா 3 காளைகளை வாடிவாசலில் அவிழ்த்துவிட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனர்.