மேலுார்: ஆட்டுக்குளம் சுந்தரேஸ்வர வித்யாசாலா மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள் நாகேஸ்வரன், பாக்கியலட்சுமி, தாளாளர் சுதா, முதல்வர் கண்ணன் தலைமையில் பொங்கல் வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக இன்ஸ்பெக்டர் சார்லஸ், டாக்டர் பரத் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
திருவேடகம்: விவேகானந்த கல்லுாரியில் முதல்வர் வெங்கடேசன் தலைமையில் பொங்கல் விழா தமிழர் பாராம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் அருள்மாறன் வரவேற்றார். செயலர் வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார். பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் வைத்து விழா கொண்டாடினர். மாணவர் மாணிக்கவாசகர் யுதிஷ்டிரன் நன்றி கூறினார். ஆண்டாள் கோதை நாச்சியாருக்கு திருப்பாவை உட்பட பாசுரங்கள் பாடினர்.