உசிலம்பட்டி --உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் மாவட்ட கிரிக்கெட் போட்டி நடந்தது.
முதல் பரிசை நாகமலை புதுக்கோட்டை எஸ்.எம்.சி.சி., அணியும், 2ம் பரிசை வாலாந்துார் சொக்கலிங்கம் பிரஸ் அணியும், 3ம் பரிசு வாலாந்துார் அலெக்ஸ்பிரஸூக்கும், 4ம் பரிசு உசிலம்பட்டி சூப்பர் ஸ்டார் அணிக்கும் கிடைத்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு செல்லம்பட்டி அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் ராஜா, செல்லம்பட்டி வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சங்கத்தலைவர் ரகு மற்றும் கவிஆனந்த், பன்னீர்செல்வம் கோப்பையை வழங்கினர்.