திண்டுக்கல்-ஜி.எஸ்.டி.சட்ட விதிகளை எளிமையாக்கவேண்டும்,டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்பேரமைப்பு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் வாணி விலாஸ் மேடு பகுதியில் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராட்டம் நடந்தது.
மண்டலதலைவர் கிருபாகரன் தலைமை வகித்தார்.
நகர தலைவர் ரவி சுப்பிரமணியன்,பொருளாளர் ஆனந்த் சேட்,துணை தலைவர் முகமது கனி பங்கேற்றனர்.அவர்கள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.,விதிகளை எளிமை யாக்க 24ல் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
அதிலும்விடிவு பிறக்கவில்லை என்றால் சென்னையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவோம்.அதன் பின்னும் அரசுசெவிசாய்க்கவில்லையென்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்,என்றனர்.