திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை விண்ணப்பம் வழங்குகிறது. டிச.31ல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர் முதல் பட்டபடிப்பு தேர்ச்சி வரை கல்வி தகுதியினை பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவுற்று புதுப்பித்து வருபவர்கள் ஜன.23 முதல் உதவி தொகை பெற தகுதியுடையவர்களாவர்.
மாற்று திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். உதவி தொகை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.
https://tnvelaivaaippu.gov.in, www.tnvelaivaaippu.gov.inல் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பிப்.28க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்கள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு அறியலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.