வேடசந்தூர்- வேடசந்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், காவலர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை.சிரமத்திற்கு ஆளான இவர்கள் வேடசந்துார் ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி பாஸ்கரன் பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.