வேடசந்தூர்- -சென்னை எக்மோரை சேர்ந்த வேலு, அருணா மகள் கலையரசி 22. சென்னையில் பிசியோதெரபி இறுதியாண்டு படித்து வருகிறார். கல்லுாரிக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இதே பஸ்சில் வேடசந்துார் சுள்எறும்பு நால்ரோட்டத்தை சேர்ந்த சென்னை தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் கண்ணன் 22, செல்வது வழக்கம். காதலித்த இவர்கள் வேடசந்துார் வந்து சுள்எறும்பு பட்டாளம்மன் கோயிலில் திருமணம் செய்தனர். இதன் பின் வேடசந்துார் போலீசில் தஞ்சம் அடைந்தனர். எஸ்.ஐ , வேலுமணி பெண்ணின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம், யாரும் இடையூறு செய்யக்கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.