பாகூர் : பாகூர் மற்றும் குடியிருப்புபாளையம் கிராமத்தில்,நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றிய செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது.
பாகூர் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆத்மா கால்நடை வளர்போர் குழுக்களுக்கு, நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றிய செயல் விளக்க நிகழ்ச்சி, பாகூர் மற்றும் குடியிருப்புபாளையம்கிராமத்தில்நடந்தது.
முகாமிற்கு, ஆத்மா கால்நடை வளர்போர் குழு தலைவர் பெருமாள் வரவேற்றார். பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான் தலைமை தாங்கி, நாட்டுக் கோழி குஞ்சுகளை வழங்கினார். வேளாண் அலுவலர் பரமநாதன், நாட்டுக் கோழி வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலமாக கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.
வட்டார மேலாளர் ஆறுமுகம் நன்றி கூறினார். உதவி வேளாண் அலுவலர் முத்துகுமரன் நன்றி கூறினார்.