செம்பட்டி--நடுப்பட்டி அருகே கெண்டிச்சம்பட்டியை சேர்ந்த விவசாயி பரமசிவம் 45, 14 வயது மகள் சின்னாளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஜன. 7ல் மாயமானார். மாணவியை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் மெத்தனம் காட்டினர். ஆவேசமடைந்த பெற்றோர் , நடுப்பட்டி, கெண்டிச்சம்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
துரித நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சமரசம் செய்ததால் கலைந்தனர்.
Advertisement