புதுச்சேரி : புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யூ., சங்க கிளை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
முதலியார்பேட்டை இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யூ., மாநிலக்குழு அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ., செயலாளர் சீனுவாசன், தலைவர் பிரபுராஜ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் துளசிங்கம், பழனிபாலன், நுார்முகமது, செல்வம், செந்தில், சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த 4 மாதங்களில் இறந்த நிர்வாகிகள் மூவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 13 ஆயிரம் வழங்கப்பட்டது.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.
நடைமுறையில் உள்ள அமைப்புசாரா நலச்சங்கத்தில் 5 ஆண்டுகளாக வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை உடனே வழங்க வேண்டும்.
புதுச்சேரியில் புதிய வாகனங்களுக்கு ஏற்றபடி நகரில் சி.என்.ஜி., எல்.பி.ஜி. கேஸ் நிலையங்களை அரசே உருவாக்கி தர வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.