புதுச்சேரி : புதுச்சேரி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைபயிற்சி நடந்தது.
பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் அமராவதி தலைமை தாங்கினார். தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த நாராயணன் தற்காப்பு பயற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.
தொடர்ந்து கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமக்கிர சிக் ஷா மூலம் 6 முதல் 8ம் வகுப்பு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்காப்பு கலையின் பயிற்சியை தர்ஷணப்பிரியா மாணவிகளுக்கு கற்று கொடுத்தார்.