புதுச்சேரி : புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், நடிகள் அஜித், விஜய் நடத்த திரைப்படங்கள் நேற்று வெளியானது. அதனையொட்டி, புதுச்சேரியில் பல இடங்களில் தடை உத்தரவை மீறி பேனர்களை வைத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை, முத்தியால்பேட்டை மற்றும் காலாப்பட்டு போலீசார் தடையை மீறி பேனர் வைத்தது தொடர்பாக விஜய் ரசிகர்கள் சதீஷ்குமார்,27; பூவரசன்,22; சங்கர்,43; காத்தவராயன்,41; ராஜசேகர்,39; மணிகண்டன்,39; மனோகர்,29; சம்பத்,21; அன்பு,29; பிரவீன்,32; ஆகிய 10 பேர் மீதும், அஜித் ரசிகர்கள் ராஜேஷ்,38; தீனா,28; சக்தி,30; ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.