புதுச்சேரி : பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணிக்கு, பொன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பள்ளி அருகே கையில் பையோடு நின்றிருந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில், பையில் தலா 5 கிராம் கொண்ட 39 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர் மூலக்குளம், ஜே.ஜே நகரை சேர்ந்த பிரகாஷ்,26; என்பதும், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பதும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, பிரகாைஷ கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.