புதுச்சேரி : வெடிகுண்டு வீசி கொலை செய்துவிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுச்சேரி, சாரம், சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி மகேஸ்வரி,37; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷிற்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் ரமேஷ், குடி போதையில் திட்டினார்.
இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் ரமேைஷ அழைத்து கண்டித்து அனுப்பினர்.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு 11.00 மணிக்கு ரமேஷ் குடித்து விட்டு வந்து மீண்டும் மகேஸ்வரியையும், அவர் மகளையும் ஆபாசமாக திட்டி தாக்கினர். காயமடைந்த மகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்து கடந்த 6ம் தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது ரமேஷ் மீண்டும் அவரை திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ரமேைஷ தேடிவருகின்றனர்.