போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

Added : ஜன 12, 2023 | |
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடந்தது.பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட புறக்காவல் நிலையம் அருகே போலீஸ் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, அருள்மணி மற்றும் பெரியக்காலாப்பட்டு, சின்னக்



புதுச்சேரி : காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் நடந்தது.

பெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட புறக்காவல் நிலையம் அருகே போலீஸ் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, அருள்மணி மற்றும் பெரியக்காலாப்பட்டு, சின்னக் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனக செட்டிகுளம், ஆகிய மீனவர் பகுதி பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் பேசுகையில், வீடுகளை வாடகை விடுபவர்கள் யார் என்ற முழு விவரத்தை அறிந்து கொடுக்க வேண்டும்.

வெளிநபர்களுக்கு வாடகை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் சூதாடுவதால், வருங்கால சந்ததியினருக்கு நாம் தீய பழக்கத்தை கற்றுக் கொடுப்பதாக அமைந்துவிடும். அதனால் அதை தவிர்க்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் சுனாமி குடியிருப்பின் அடிப்படை பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு அமைத்து தர வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து மின்துறைக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X