மயிலம் : மயிலம் அருகே மயக்க நிலையில் இருந்த இரண்டு மயில்களை போலீசார் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மயிலம் அடுத்த அவனம்பட்டு ஏரிக்கரை அருகே இரண்டு மயில்கள் மயக்க நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் ஆனந்தன், மோகன்தாஸ் இரண்டு மயில்களையும் மீட்டு, திண்டிவனம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் பிரபுவிடம் இரண்டு மயில்களையும் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள், மயிலை கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.