கடலுார் : நெய்வேலி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மேல்பாப்பனம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் முருகானந்தம், 23; தொழிலாளி.
இவருக்கு, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததால், நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முருகானந்தம் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். கடலுார் போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினர்.
சிறுமியை பலாத்காரம் செய்து ஏமாற்றிய முருகானந்தத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை, 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.