கடலுார் : கடலுார் அருகே கணவர் இறந்த வேதனையில் மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த நல்லாத்துார், ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி மலர்வழி, 45. நேற்று காலை அவரது இரு மகன்கள் கல்லுாரிக்கு சென்ற பின், வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல், இறுதி சடங்கு ஏற்பாடு செய்தனர். தகவலறிந்த துாக்கணாம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று, மலர்விழியின் உறவினர்களிடம் பேசினர்.
தற்கொலை செய்து கொண்டவர் உடலை போலீசுக்கு தகவல் சொல்லாமல் அடக்கம் செய்யக்கூடாது என கூறி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், மலர்விழியின் கணவர் பார்த்திபன் கடந்த ஆண்டு இறந்தார். அவரது நினைவாகவே மலர்விழி இருந்து வந்தார். முதலாண்டு நினைவு நாள் சமீபத்தில் வந்த நிலையில், மன வேதனையில் அவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
இதுகுறித்து துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.