நெய்வேலி : நெய்வேலியில் நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றிய நான்கு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி வட்டம் - 21ல் நாட்டு வெடிகுண்டுகளுடன் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, தகவல் கூறப்பட்ட இடத்திற்கு நேற்று விரைந்து சென்ற டெல்டா போலீசார், அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 4 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்ததில், நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்ததில், பிடிபட்ட நபர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என, தெரிய வந்தது.
மேலும் 7 பேருக்கு இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வெடி குண்டுகளுடன் பதுங்கி இருந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.