''ஆளுங்கட்சிக்காரங்க உற்சாகத்துல இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை, முதல்வர் ஸ்டாலின், 9ம் தேதி துவக்கி வச்சாருல்லா... அதுக்கு முந்தைய நாள், ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சி மற்றும் அமைச்சர்கள் தரப்புல இருந்து, பொங்கல் பரிசு கொடுத்து அசத்திபுட்டாவ வே...
''நகர, ஒன்றிய செயலர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாயும், வட்டச் செயலர், கவுன்சிலர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாயும், வட்டப் பிரதிநிதிகள், பிற ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கமா குடுத்து குஷிப்படுத்திட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
![]()
|
''கட்சிக்காராளுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லன்னாலும், பொங்கல் பரிசோல்லியோ... குஷியாத்தான் இருப்பா ஓய்...'' என குப்பண்ணா கூற, சிரித்தபடியே சபை கலைந்தது.