பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பவர்களிலும், சுற்றுச்சூழலின் மீது அக்கறை கொண்டவர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு, பாத்ஜீரோ.காம் என்ற இணையதளம் உதவுகிறது. ஒரு நிறுவனம், சூழலுக்கு கேடு விளைவிக்கும் கார்பன் - டை - ஆக்சைடு போன்ற உமிழ்வுகளை வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் முதலீடு செய்தால், நீங்களும் அந்த மாசுபாடு உண்டாவதற்கு நிதி தருகிறீர்கள் என்று பொருள்.
எனவே, பாத்ஜீரோ இணையதளம், சூழல் வல்லுனர்களை வைத்து, நிறுவனங்களிடம் மாசுபாடு பற்றிய தகவல்களை சேகரிக்கிறது. பிறகு, தனிப்பட்ட முதலீட்டாளர்கள் இந்த தளத்திலிருந்து தகவல் பெற்று, மாசுபாடு குறைவாக உருவாக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய முடியும்; பசுமை முதலீட்டாளராக மாற முடியும்.