21 கட்சிகளுக்கு அழைப்பு: யாத்திரை நிறைவு நாளை பிரமாண்டமாக நடத்த ராகுல் திட்டம்

Updated : ஜன 12, 2023 | Added : ஜன 12, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி: ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் வரும் ஜன.,30ம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில் நிறைவு பெறுகிறது. அப்போது நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாட 21 கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.காங்., எம்.பி ராகுல் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த செப்.,7 ம் தேதி யாத்திரையை துவக்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்தியபிரதேசம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ராகுலின் இந்திய ஒற்றுமை பயணம் வரும் ஜன.,30ம் தேதி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீ நகரில் நிறைவு பெறுகிறது. அப்போது நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாட 21 கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.




latest tamil news


காங்., எம்.பி ராகுல் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த செப்.,7 ம் தேதி யாத்திரையை துவக்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுடில்லி, உ.பி, அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக யாத்திரை, தற்போது பஞ்சாப் மாநிலத்தை அடைந்துள்ளது.


இதுவரை, யாத்திரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் கடந்துள்ளது. ஜன.,11-20 வரை பஞ்சாப்பில் யாத்திரை நடைபெறும். இதையடுத்து, காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், வரும் ஜன.,30ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது. அங்கு ராகுல் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.


இந்நிலையில், யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு, 21 கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.



latest tamil news


கார்கே கடிதத்தில் கூறியிருப்பதாவது: யாத்திரை துவங்கியதில் இருந்தே, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல் அழைப்பின்பேரில், பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.


அதுபோல், ஸ்ரீநகரில் 30ம் தேதி நடக்கும் நிறைவு விழாவுக்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு, வன்முறைக்கு எதிராக போராடவே இந்த யாத்திரை. சிக்கலான இந்த தருணத்தில் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது.


இத்தகைய சூழ்நிலையில், பாதயாத்திரை வலிமையான சக்தியாக உருவெடுத்துள்ளது. எனவே, நீங்கள் பங்கேற்றால், யாத்திரையின் வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். மக்களுடனான நேரடி உரையாடல்தான், யாத்திரையின் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சிகள்:


* திரிணாமூல் காங்கிரஸ், * ஐக்கிய ஜனதா தளம், * தெலுங்கு தேசம்,


* தேசிய மாநாட்டு கட்சி, * சமாஜ் வாதி, * பகுஜன் சமாஜ் கட்சி,


* திமுக, * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், * இந்திய கம்யூனிஸ்ட்,


* ராஷ்டிரிய ஜனதா தளம், * மக்கள் ஜனநாயக கட்சி, * மதிமுக,


* தேசியவாத காங்கிரஸ், * விடுதலை சிறுத்தைக்கட்சி, * இந்திய முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



அழைப்பு விடுக்காத கட்சி:

* ஆம் ஆத்மி, * ஜனதா தளம், * ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (12)

12-ஜன-202319:04:36 IST Report Abuse
பேசும் தமிழன் அடுத்து என்ன... பட்டாயா யாத்திரை தானே.... பப்பு நீ போய் ஜமாய்..... இந்திய மக்கள் விழித்து கொண்டு விட்டார்கள்... உங்கள் குடும்பம் வேண்டுமானால்.... இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்!!!
Rate this:
Cancel
12-ஜன-202318:17:14 IST Report Abuse
பேசும் தமிழன் அதில் பிஜேபி கட்சியும் இருக்குமா..... எந்த கட்சி கலந்து கொண்டாலும்.... ஒரு கட்சியும் காங்கிரஸ் தலைமையை ஏற்க மாட்டார்கள்.... சீட்டும் கொடுக்க மாட்டார்கள்.... வேண்டுமானால் இதயத்தில் இடம் கொடுப்பார்கள் !!!
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
12-ஜன-202318:04:31 IST Report Abuse
DVRR இது வரை என்ன செலவு ஆயிற்று இந்த Bharat jodo (இணைத்தல்) or chodo (ஓடிவிடுதல்) யாத்திரைக்கு 1) பெட்ரோல் செலவு = 3750 கிமீ 175 நாட்கள் 3.75 கிமீ ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு + 60 வண்டி வாங்கிய செலவு + தின உணவு 200 பேருக்கு + தினம் விளம்பரம் டிவியில் + மற்ற செலவுகள் = ரூ 104.74 கோடி எனக்கு வருகின்றது???இதனால் நாட்டு மக்கள் அடைந்த லாபம் என்ன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X