கிருஷ்ணகிரி, ஜன. 12-
கிருஷ்ணகிரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல், நேற்று நடந்தது.
தி.மு.க.,வில் உட்கட்சி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் மகளிரணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது. சட்டசபை கூட்டம் நடப்பதால், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரான மதியழகன்
எம்.எல்.ஏ., கலந்து கொள்ளவில்லை.
மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலையில், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி ஆகியோர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., கட்சி பொறுப்புகளுக்கு, விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினர்.
தற்போது பொறுப்பிலுள்ள மாவட்ட மகளிரணி, துணை பொதுச்செயலாளர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேர்காணலில் கலந்து கொண்டவர்களின் பதில்களின்படி, புதிய மகளிரணி நிர்வாகிகளை, கட்சி தலைமை அறிவிக்கும் என, அவர்கள் தெரிவித்தனர்.