கிருஷ்ணகிரி, ஜன. 12-
மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கார் மாவட்டத்தை சேர்ந்த ஆஷாமால்வியா. மலையேற்றத்தில் சாதனை படைத்த தேசிய வீராங்கனை. இவர், பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சைக்கிள் பணம் மேற்கொண்டுள்ளார். நாடு முழுவதும், 28 மாநிலங்களில், 25 ஆயிரம் கி.மீ., துாரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட இவர், கடந்த 2021, நவ.,1ல் தன் பயணத்தை போபாலில் துவக்கி, குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா என 6 மாநிலங்களில் பயணம் செய்துள்ளார். அங்கிருந்து, 7வது மாநிலமாக தமிழ்நாட்டின் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். பின்னர் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமேஸ்வரம், மதுரை, திண்டுக்கல், கரூர், தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி வந்தடைந்தார். நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு வந்த அவரை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வரவேற்று, அவரது சேவை மற்றும் சாதனையை பாராட்டி வாழ்த்தினார்.