எலச்சிபாளையம், ஜன. 12-
வரும், 2047 ல், 100வது சுதந்திரதினத்தை கொண்டாடும் போது, அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நாடாக, முன்னேறிய நாடாக நம் நாடு இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் பேசினார்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த, கோவில்பாளையத்தில், பா.ஜ., கட்சி சார்பில் நடந்த, ' நம்ம ஊரு மோடி பொங்கல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
ஆண்டு தோறும் நம்மஊருமோடி பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை, தமிழர் பெருமையை போற்றும் அருமையான பொங்கல்விழா அனைவரையும் ஒன்றுசேர்த்துள்ளது.
பிரதமர் மோடி, எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை நிறைவேற்றி, அனைவருடைய கனவும் நிறைவேறியுள்ளது. தண்ணீருக்கு கஷ்டப்பட்ட காலம்மாறி, இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்குவதே பிரதமரின் நோக்கம். அதை தமிழகம் முழுவதும் நிறைவேற்றி வருகிறோம்.
வரும், 2047 ல், 100வது சுதந்திரதினத்தை கொண்டாடும் போது, அனைத்தும், அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் நாடாக, முன்னேறிய நாடாக நம் நாடு இருக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ.,மாநில துணைத்
தலைவர் ராமலிங்கம், பா.ஜ., நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்குமாவட்ட பார்வையாளர் சிவகாமிபரமசிவம், ஒன்றிய தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.