ராசிபுரம், ஜன.12-
ராசிபுரம் டி.எஸ்.பி.,யை கண்டித்து போலீஸ் ஸ்டேஷனில் அனைத்து கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் அடுத்த ஆண்டலூர்கேட் பகுதியில் உளுஅளு திருவள்ளுவர் அரசு கல்லூரி கல்லூரியில் கடந்த சில வாரங்களுக்கு முன், மரங்களை வெட்டி விற்பனை செய்து தொடர்பாக கல்லூரி முதல்வர் பங்காரு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கல்லூரியில் மரம் வெட்ட உதவியாக இருந்த, 2 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்யாமல் முதல்வரை மட்டும் பணியிடம் நீக்கம் செய்ததை கண்டித்து, அனைத்து கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக, ராசிபுரம் டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மனு அளித்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட, டி.எஸ்.பி., அனுமதி தராமல் அனைத்து கட்சியினரை தொடர்ந்து அலைகழித்து வந்ததாகவும், ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராசிபுரம் டி.எஸ்.பி.,யை கண்டித்து ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன், அனைத்துக் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.