கரூர், ஜன. 12-
கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த, திருநாவுக்கரசு, 39, கரூர், தான்தோன்றிமலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் ராயனுாரை சேர்ந்த குடியரசு, 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.200 பறித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், குடியரசை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன், 20. இவர், கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது, கரூர், மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம், 28, கத்தியை காட்டி பணம் பறித்தார். கரூர் டவுன் போலீசார், சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா, 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது, நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக், 32, அவரிடம் இருந்த பர்சை திருடி சென்றார். வெங்கமேடு போலீசார், ஸ்ரீராம் கார்த்திக்கை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர், முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன், 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்றபோது, கரூர், மாவடியான் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார், வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement