கோல்கட்டா: இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று (ஜன.,12) கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் ஷானகா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். அந்த அணியில் மதுஷாங்கா மற்றும் நிசன்கா ஆகியோர் நீக்கப்பட்டு பெர்னான்டோ, லஹிரு குமாரா சேர்க்கப்பட்டனர். இந்திய அணியில் சகாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.