வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: இளைஞர் சக்திதான் இந்தியாவின் வழிகாட்டி. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் தான் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து 30 ஆயிரம் இளைஞர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியவதாவது: இளைஞர் சக்திதான் இந்தியாவின் வழிகாட்டி. அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் தான் உள்ளது. இவைதான் இந்தியாவின் திசையை தீர்மானிக்கும்.

வளர்ச்சி வேகத்தில் உலக நாடுகளின் வரிசையில் இந்தியா 3 ம் இடத்திற்கு வர வேண்டும் என்பதே இலக்கு. விளையாட்டு, அறிவியல் என பல துறைகளில் இளைஞர்கள் சாதிக்க வேண்டும். அனைவருக்கும் பாதை கிடைத்திருக்கிறது.
இளைஞர்கள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இளமையாக இருப்பது என்பது நமது முயற்சிகளில் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இளமையாக இருத்தல் என்பது நடைமுறையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.