ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 'நேட்டிவ் டாக் பிரிட்ஸ் ஸ்பெஷாலிட்டி கிளப்' சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடந்தது.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக இனமான கன்னி, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பையும், மற்ற பகுதிகளில் இருந்து கேரவன் ஹவுண்ட், ராம்பூர் ஹவுண்ட் உள்ளிட்ட 300 நாட்டு இன நாய்களும் பங்கேற்றன.
வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, ஓட்ட அமைப்பு, வேகம் உள்ளிட்ட அமைப்புகளை குஜராத் மாநில நிபுணர் ஹரிஷ் பட்டேல் தேர்வு செய்தார். சிறப்பாக செயல்பட்ட 8 நாய்கள், 2 நாய் குட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றன. வெற்றி பெற்ற நாய் உரிமையாளருக்கு அன்னப்பராஜா பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா கேடயம், சான்றிதழ்களை வழங்கினார். நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
நாட்டு இன நாய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இக்கண்காட்சி நடப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கற்பக செல்வம் தெரிவித்தார்.