கச்சிராயபாளையம்:கள்ளக்குறிச்சி அருகே, பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபரை தாக்கி, அவரது அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுாரைச் சேர்ந்த முனியப்பிள்ளை மகன் பூவரசன், 21. இவர், அதே பகுதி ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தார். 8ம் தேதி காலை 11.௦௦ மணிக்கு அப்பெண் வீட்டிற்கு பூவரசன் சென்றுள்ளார்.
இதை கண்காணித்த பெண்ணின் உறவினர்கள் பூவரசனை தாக்கி, அவரது அந்தரங்க உறுப்பு மற்றும் பின் பகுதியில் சூடு வைத்துஉள்ளனர்.
காயமடைந்த பூவரசன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கச்சிராயபாளையம் போலீசார், சூடு வைத்த மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.