டி.சி.எஸ்., 11,000 கோடி, இன்போசிஸ் 6,600 கோடி, எச்.சி.எல்., 4,000 கோடி!

Updated : ஜன 12, 2023 | Added : ஜன 12, 2023 | |
Advertisement
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை இந்திய ஐடி நிறுவனங்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. டி.சி.எஸ்., ரூ.10,883 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இன்போசிஸ் ரூ.6,586 கோடியும், எச்.சி.எல்., ரூ.3,489 கோடியும் லாபம் பார்த்துள்ளன.ஐடி துறை ரெசஷன் எனும் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களின் க்ளையன்டுகள் உள்ள
TCS 11,000 crore, Infosys 6,600 crore, HCL 4,000 crore!  டி.சி.எஸ்., 11,000 கோடி, இன்போசிஸ் 6,600 கோடி, எச்.சி.எல்., 4,000 கோடி!

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வரவு செலவு கணக்குகளை இந்திய ஐடி நிறுவனங்கள் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. டி.சி.எஸ்., ரூ.10,883 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இன்போசிஸ் ரூ.6,586 கோடியும், எச்.சி.எல்., ரூ.3,489 கோடியும் லாபம் பார்த்துள்ளன.

ஐடி துறை ரெசஷன் எனும் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. குறிப்பாக இந்திய ஐடி நிறுவனங்களின் க்ளையன்டுகள் உள்ள அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏற்படும் மந்தநிலையானது, முதலில் ஐடி செலவுகளில் எதிரொலிக்கும். இதனால் அந்த மார்க்கெட்டை நம்பியுள்ள இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் குறையும். இதன் காரணமாக கடந்த ஆண்டில் முன்னணி ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்டவை கூட 30 சதவீதம் அளவிற்கு சரிந்தன. 2ம் காலாண்டு முடிவுகள் பாசிடிவ் ஆக வந்ததால் சரிவிலிருந்து சற்றே மீண்டன.


latest tamil news

இந்நிலையில் அக்., - டிச., வரையிலான மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. டிசிஎஸ்., வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 19% அதிகரித்து ரூ.58,229 கோடியாக உள்ளது. நிகர லாபம் ரூ.9,806 கோடியிலிருந்து 10.98% உயர்ந்து ரூ.10,883 கோடியாக பதிவாகியுள்ளது. இருப்பினும் நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட லாப வரம்பு குறைந்துள்ளது. டிவிடென்ட் ஆக ரூ.75 அறிவித்துள்ளனர். தற்போது பங்கின் விலை ரூ.3,300-க்கு மேல் உள்ளது.


latest tamil news

இன்போசிஸ் நிறுவனம் இன்று (ஜன., 12) தனது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. கடந்த ஆண்டில் ரூ.31,867 கோடி ஆக இருந்த வருவாய், இந்த காலாண்டில் 20.2% அதிகரித்து ரூ.38,318 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபமானது ரூ.5,809 கோடியிலிருந்து, ரூ.6,586 கோடியாக வளர்ந்துள்ளது. இது 13.4% அதிகம் ஆகும்.


latest tamil news

எச்.சி.எல்., நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு முடிவு கணிப்புகளை தாண்டியுள்ளது. 10 சதவீத லாபத்தை நிபுணர்கள் எதிர்பார்த்த நிலையில், 19% நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. லாபமானது ரூ.3,442 கோடியிலிருந்து ரூ.4,096 கோடியாக வளர்ந்துள்ளது. வருவாயும் ரூ.26,700 கோடியாக உயர்ந்துள்ளது. பங்கு ஒன்றிற்கு ரூ.10 டிவிடென்ட் அறிவித்துள்ளது எச்.சி.எல்.,

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X