டில்லி இளம் பெண் கொடூர கொலை: விசாரணை அறிக்கை சமர்பிப்பு

Updated : ஜன 12, 2023 | Added : ஜன 12, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் விபத்தில் காரில் சிக்கி பல கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடில்லியில், புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், ஜன-01ம் தேதி அதிகாலையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதியதில்
Delhi Police, Young Woman, Amit Shah, டில்லி ,இளம் பெண், அமித்ஷா, ஷாலினிசிங், டில்லி காவல்துறை, Delhi,  Shalinisingh,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லியில் விபத்தில் காரில் சிக்கி பல கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவத்தில், விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடில்லியில், புறநகர் பகுதியான சுல்தான்புரி என்ற இடத்தில், ஜன-01ம் தேதி அதிகாலையில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 20 வயது இளம் பெண் மீது கார் மோதியதில் கார் சக்கரத்தில் பெண்ணின் உடல் சிக்கி 12 கி.மீ., துாரம் சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டது.


latest tamil news


இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய செய்தது. காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டில்லி காவல்துறை சிறப்பு அதிகாரி ஷாலினிசிங்கை நியமித்து விசாரணை நடத்தி உடனே அறிக்கை தர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். இதையடுத்து ஷாலினிசிங் விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தார். இதில் காரில் இருந்த 5 பேர் மீது கொலை வழக்காக பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-ஜன-202306:48:00 IST Report Abuse
Natarajan Ramanathan கேவலம் ஒரு திரையரங்கில் வெறிபிடித்த ரசிக குஞ்சுகள் அராஜகம் செய்வதை கூட கட்டுப்படுத்த முடியாமல் திறனற்ற அரசின் காவல்துறை செயலிழந்துள்ளது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஜன-202321:11:43 IST Report Abuse
M  Ramachandran டில்லியில் நடக்கும் அராஜகம் காவல்துறைக்கு ஒரு சவால். தண்டனையை நிச்சயம் கடுமையாக்க படவேண்டும் . அங்கு தான் கற்பழிப்புகளும் மிக அதிகம். இரவிலும் பெண்கள் தனியாக வெளியில் வருவதை தவிர்க்க வேண்டிய கட்டாயம் . .பெரும்பாலும் திமிர் பிடித்த செல்வந்தர்கள் அரசியல் பின்னணி மற்றும் அவர்களல் வாரிசுகளால் நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X