சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

தனக்கு தானே 'அட்வைஸ்!'

Added : ஜன 12, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் இரவு, 9:30 மணிக்கு மேல் பேச துவங்கினார்.அவர் பேசுகையில், 'பேச்சாளர் ஒருவர், அதிக நேரம் பேசியபடியே இருந்தார்... இதனால், ஆத்திரம் அடைந்த ஒருவர், உருட்டு கட்டையுடன், மேடையை நோக்கிச் சென்றார்... உடனே பேச்சாளர்,
பக்கவாத்தியம்

மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் இரவு, 9:30 மணிக்கு மேல் பேச துவங்கினார்.

அவர் பேசுகையில், 'பேச்சாளர் ஒருவர், அதிக நேரம் பேசியபடியே இருந்தார்... இதனால், ஆத்திரம் அடைந்த ஒருவர், உருட்டு கட்டையுடன், மேடையை நோக்கிச் சென்றார்... உடனே பேச்சாளர், இத்துடன் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.

'அதற்கு அந்த நபர், 'நீ பேசு... நான், உன்னை பேச அழைத்து வந்த நபரை அடிக்க வந்தேன்' என்று கூறியுள்ளார். அதனால், அதிக நேரம் பேசக் கூடாது என்பதில், நான் கவனமாக இருக்கிறேன்' என்றார்.

அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'பெண்களை பற்றி தப்பா பேசி பலரிடம், 'வாங்கி' கட்டிக்கிட்டு, இப்ப தேசிய மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்டுட்டு வந்துருக்கார்... இனிமே கவனமா பேசணும்னு, தனக்கு தானே, 'அட்வைஸ்' செஞ்சுக்கிறார் போலும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
13-ஜன-202310:36:59 IST Report Abuse
Yes your honor இவ்வளவு அசிங்கப்பட்ட ஒருத்தனை மீண்டும் மேடையில் ஏற்றி பேசவைக்கின்றனரே. திமுகவினருக்கு பொதுமேடை ஒழுக்கமும் நாகரிகமும் சிறிதும் இல்லையா என்ன? இவ்வளவா கூச்ச நாச்சமில்லாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டால், அது நம்போன்ற நல்லவர்களுக்கு அவமானம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-ஜன-202306:31:43 IST Report Abuse
D.Ambujavalli இவர் பேசாமல் 'நன்றி, வணக்கம்' என்று உட்கார்ந்தாலே வம்பு, வழக்கு வராது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X