மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நுாற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடந்தது. கூட்டத்தில், தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் இரவு, 9:30 மணிக்கு மேல் பேச துவங்கினார்.
அவர் பேசுகையில், 'பேச்சாளர் ஒருவர், அதிக நேரம் பேசியபடியே இருந்தார்... இதனால், ஆத்திரம் அடைந்த ஒருவர், உருட்டு கட்டையுடன், மேடையை நோக்கிச் சென்றார்... உடனே பேச்சாளர், இத்துடன் பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.
'அதற்கு அந்த நபர், 'நீ பேசு... நான், உன்னை பேச அழைத்து வந்த நபரை அடிக்க வந்தேன்' என்று கூறியுள்ளார். அதனால், அதிக நேரம் பேசக் கூடாது என்பதில், நான் கவனமாக இருக்கிறேன்' என்றார்.
அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'பெண்களை பற்றி தப்பா பேசி பலரிடம், 'வாங்கி' கட்டிக்கிட்டு, இப்ப தேசிய மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்டுட்டு வந்துருக்கார்... இனிமே கவனமா பேசணும்னு, தனக்கு தானே, 'அட்வைஸ்' செஞ்சுக்கிறார் போலும்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.