சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 12, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுப்பது தான், பா.ஜ.,வின் நோக்கம்; அதற்காகத் தான் கவர்னரை பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி கவர்னரால் ஏற்பட்டுஉள்ளது. கவர்னரின் செயல் தீவிரவாத செயல். அவர், கவர்னர் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. கவர்னரை
 பேச்சு, பேட்டி, அறிக்கை


வி.சி., கட்சி எம்.பி., ரவிகுமார் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைத்து, வளர்ச்சியை தடுப்பது தான், பா.ஜ.,வின் நோக்கம்; அதற்காகத் தான் கவர்னரை பயன்படுத்துகின்றனர். தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி கவர்னரால் ஏற்பட்டுஉள்ளது. கவர்னரின் செயல் தீவிரவாத செயல். அவர், கவர்னர் பதவியில் நீடிக்க எந்த தகுதியும் இல்லை. கவர்னரை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

கோவை கார் குண்டு வெடிப்பு, புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை போன்ற எண்ணற்ற பிரச்னைகளில் அமைதியாக இருக்கும், தி.மு.க., கூட்டணி கட்சிகள், இந்த விஷயத்திலும் அமைதியாக இருக்கலாமே!


பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி: பா.ம.க., தலைமையில், 2026ல் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க, நான்கு மாதங்களுக்கு முன்பாக திட்டமிடுவோம்.


இப்படி, 'சஸ்பென்ஸ்' வைத்தால் தானே, கூட்டணி பேரம் வெற்றிகரமாக முடியும்!

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா அறிக்கை: 'தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கவர்னர் பற்றி பேச வேண்டாம்' என, தங்கள் கட்சியினரிடம் முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். புலி பாய்வது போல் பாய்ந்தீர்கள்; பின், ஒரே நாளில் பதுங்குகிறீர்கள். இது தான் உங்கள், 'திராவிட மாடலோ?'

இவரது கருத்தை பார்த்தால், கவர்னருடன் முதல்வர் மோதியபடியே இருக்க வேண்டும் என, எதிர்பார்ப்பது போல தோணுகிறதே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழக மின் வாரியத்தில், நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை ஒழிப்பதற்கு, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அதற்காக, ஆட்குறைப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு, 19 தொழிற்சங்கங்களுக்கு, மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இது, எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடாகும். மின் வாரியத்தில், 40 சதவீத இடங்கள் காலியாக உள்ளன; இதனால், மின் வாரியத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து விட்டு, குத்தகை முறையில் பணியாளர்களை நியமிப்பது மனிதவளத்தை சுரண்டும் செயலாகும்.

தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும், கம்யூ.,க்கள் இதை சும்மா விட மாட்டாங்க... உடனே போராட்ட களத்தில் குதிச்சு, தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க செய்வாங்க, பாருங்க!

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: கருணாநிதியால், 1975, 2000, 2009, 2010ம் ஆண்டுகளில் திறக்கப்பட்ட கல்வெட்டுகளில், 'தமிழக முதல்வர்' என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழகம் என்றும் சொல்வோம்; தமிழ்நாடு என்றும் சொல்வோம். வாடகை சின்னத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு, கண்ணாடி தேவை என்றால், வாடகைக்கு வாங்கி அனுப்புகிறேன்.

வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகள், தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு, சுயமரியாதையை காப்பாற்றி, இவர் முகத்தில் கரி பூசப் போறாங்க, பாருங்க!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (1)

Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13-ஜன-202317:09:48 IST Report Abuse
Anantharaman Srinivasan கூட்டணிக்கட்சிகள் சொந்த சின்னத்தில் போட்டியிட திமுக ஒத்துக்கொள்ள வேண்டுமே..???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X