மதுரை:மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் வரும், 15ல் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண கவர்னர் ஆர்.என்.ரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு, விமானத்தில் கவர்னருக்கு, 15ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை, தென் மாவட்டங்களில் கவர்னருக்கு நிகழ்ச்சி ஏதும் இல்லாத நிலையில், அன்று வருவதால் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண வருகிறார் என, தகவல் வெளியானது.
இதுகுறித்து கவர்னர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று அவனியாபுரத்தில் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் ஆய்வு செய்தார்.