காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடந்த 9ம் தேதி, காஞ்சிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ரேஷன் கடையில் கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அன்றைய தினமே, படப்பையில் உள்ள ரேஷன் கடையில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கினார்.
இதையடுத்து, ஒவ்வொரு ரேஷன் கடையிலும், டோக்கனில் தெரிவித்த நாட்களில், குடும்ப அட்டைதாரர்கள் சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3 லட்சத்து 93 ஆயிரத்து 304 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.
இதில், 3 லட்சத்து 41 ஆயிரத்து 581 பேருக்கு நேற்றைய நிலவரப்படி வழங்கப்பட்டுள்ளதாக, பொது வினியோகத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.