காஞ்சிபுரத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் அருகில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இரு இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடையின் மீது, இரவு நேரத்தில் ஒளிரும் பட்டை பொருத்தவோ அல்லது வெள்ளை நிற வண்ணம் அடிக்கவில்லை.
இதனால், அவ்வழியாக வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பதைக் கவனிக்காமல் தவறி விழுந்து, விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தடுக்கும் வகையில், வேகத்தடைக்கு வெள்ளை நிற வண்ணம் அடித்தும், இரவில் ஒளிரும் பட்டை அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.மதனகோபால்,
காஞ்சிபுரம்.