ஸ்ரீபெரும்புதுார்;ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், செல்வழிமங்கலம் ஊராட்சியில், பா.ஜ., சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த செல்வழிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள், மகளிருக்கென தனிதனியே விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாபு, துணை தலைவர் எல்லம்மாள், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.