உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் பிரசித்தம் பெற்ற அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், தை 2ல், மாட்டுப் பொங்கல் நாளில், பார்வேட்டை திருவிழா கோலாகலமாக நடக்கும்.
திருவிழாவின் போது காஞ்சிபுரம் பழையசீவரம் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, சாலவாக்கம் வரதராஜ பெருமாள், காவாந்தண்டலம் சீனிவாச பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், ஆகிய கோவில்களில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி துவங்கி, மாலையில் திருமுக்கூடல், வெங்கடேச பெருமாள் கோவில் வந்தடைந்து பார்வேட்டை விழா நடைபெறும்.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொள்வர். இந்தாண்டுக்கான விழா, வரும் 16ம் தேதி நடக்க உள்ளது.
திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், கோவிலை சுற்றி சீரமைத்தல், வளாகப் பராமரிப்பு, பக்தர்களுக்கான இடவசதி ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.