வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உத்தரகண்ட் ஜோஷிமத்தில் புதையும் ஜோஷிமத் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் புதுடில்லியில்
நடந்தது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()
|
உள்துறை செயலர் அஜய் பல்லா உட்பட பல்வேறு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். 40 நிமிடங்கள் நடந்த கூட்டத்தில், ஜோஷிமத் நகரின் தற்போதைய நிலை மற்றும் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்.இந்த கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், உத்தரகண்ட் மாநில மூத்த அதிகாரிகள், ஐ.ஐ.டி., - ரூர்கியை சேர்ந்த நிபுணர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவன அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement