கிரேட்டர் நொய்டா:தற்போது நடைபெற்று வரும் 'ஆட்டோ எக்ஸ்போ' கண்காட்சியில், வர்த்தக வாகனம் முதல் பேருந்துகள் வரை, வெவ்வேறு எரிவாயு மற்றும் மின்சார வகைகளில் பல வாகனங்கள் அறிமுகங்கள் செய்யப்பட்டன. 'அசோக் லேலாண்டு, ஸ்விட்ச் மொபிலிட்டி, டாடா, ஜே.பி.எம்., வால்வோ ஐச்சர், கம்மின்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இவற்றை காட்சிப்படுத்தின.
அசோக் லேலாண்டு
'கட்டிங் எட்ஜ்' தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்நிறுவனம், எதிர்கால அறிமுகங்களான 7 போக்குவரத்து தீர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அசோக் லேலாண்டு நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா கூறியதாவது:
வர்த்தக வாகன பிரிவில், நவீன தொழில்நுட்பங்களை வெளியிடுவதில் அசோக் லேலாண்டு நிறுவனம் சிறந்து விளங்குகிறது.
இது போன்ற, புதுமையான, எதிர்காலத்திற்கு அவசியமான வாகன அறிமுகங்கள், நாங்கள் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதை எடுத்துகாட்டுவதுடன் மட்டுமின்றி, பசுமை போக்குவரத்து உறுதிப்பாட்டிலும் தீர்கமாக உள்ளதை தெரிவிப்பதாகவும் உள்ளது. அத்துடன், வாகனப் போக்குவரத்து துறை உருமாற்றத்தை வழி நடத்தும் திறனுடனும், தயார் நிலையிலும் நாங்கள் இருப்பதை இது கோடிட்டு காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்ச் மொபிலிட்டி
அசோக் லேலாண்டின் மற்றொரு நிறுவனம் 'ஸ்விட்ச் மொபிலிட்டி', அதன் இரண்டு புதிய 'ஐ.இ.வி., சீரிஸ்' மின்சார வர்த்தக வாகனங்களை, இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மகேஷ் பாபு கூறியதாவது:
குறைந்த மற்றும் நடுத்தர துாரப் போக்குவரத்தில், நிலையான தீர்வுகளுக்கு அதிக தேவைகள் எழுந்துள்ளன. உலகளவில், 'கட்டிங் எட்ஜ்' தொழில்நுட்பம் கொண்ட நிகரற்ற வாகனங்களை வழங்கும் வெற்றிகரமான பிராண்டாக, ஸ்விட்ச் மொபிலிட்டி திகழ்கிறது.
இந்த ஐ.இ.வி., உருவாக்கு தளத்தின் அடுத்த இலக்காக 1.2 டன் முதல் 4.5 டன் எடை வரையிலான வாகனங்களுக்கு குறி வைப்பதோடு, வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, சிறப்பான வாகனத்தை அறிமுகப்படுத்துவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நீளம் 13.5 மீட்டர்எரிவாயு டாங்க் 1,500 லிட்டர்ரேஞ்ச் 1,000 கி.மீ.,பயணிகள் 36
'பாஸ்' பேட்டரி மின்சார வாகனம் 'பியூயல் செல்' மின்சார வாகனம்ஹைட்ரஜன் எரிவாயு வாகனம்எல்.என்.ஜி., எரிவாயு வாகனம் 'இன்டர்சிட்டி' சி.என்.ஜி., பேருந்து 'படா தோஸ்த்' சி.என்.ஜி., சிற்றுந்து