அத்திமாஞ்சேரிபேட்டை:பள்ளிப்பட்டில் இருந்து, ஆர்.கே.பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாமிநாயுடு கண்டிகை.
நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலையில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை சந்திப்பில், பேருந்துக்காக இரவு நேரத்தில் காத்திருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, மின் கம்பத்தில் தெருவிளக்கு பொருத்தப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன் இந்த மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதனால், இந்த பகுதியில் இருள் சூழ்ந்துள்ளது.
இதனால், பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். உடைந்துள்ள மின் கம்பத்திற்கு மாற்றாக, புதிய மின் கம்பம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், நிறுவப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி, மின் கம்பத்தை விரைவில் சீரமைக்கவும், தெரு விளக்கு பொருத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.