மேட்டுப்பாளையம்:எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மேட்டுப்பாளையம் அடுத்த ஆலங்கொம்பில், சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளன. இப்பள்ளிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழரின் மரபுகளையும், பண்பாட்டையும் விளக்கும் விதமாக, கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
தமிழ் கடவுள் முருகனின் பாடல்களுடன் கலை நிகழ்ச்சி துவங்கியது. இதில், உழவர்களின் வாழ்க்கை நிலையையும், போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய எல்லா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நாடகம் வாயிலாக, மாணவர்கள் ஆடி, பாடி கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்ஷிதா, தமிழ் திருநாள் தைப்பொங்கல் குறித்து பேசினார்.
விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.