பழவேற்காடு:பழவேற்காடு நடுவூர் மாதாகுப்பம்- - கூனங்குப்பம் மீனவர்களிடையே மீன்பிடித் தொழில் செய்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
கடந்த 5 மற்றும் 7ம் தேதிகளில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நடுவூர்மாதாகுப்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம் அடைந்தனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி, நடுவூர் மாதா குப்பத்தித்தினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, 25 பேரை திருப்பாலைவனம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக, நடுவூர்மாதாகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த, 20 பெண்கள் உட்பட 50பேர் மீது திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.