பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே, புல்லுார் கிழக்கு காட்டை ஒட்டி அமைந்துள்ளது உணவு பாதுகாப்பு கிடங்கு. இங்கிருந்து ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு உணவு தானியங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், உணவு பாதுகாப்பு கிடங்கின் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள மின் கம்பத்தில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டுள்ளன.
சுற்றுச்சுவரை ஒட்டி தொங்கும் இந்த மின் கம்பிகளால், விபத்து அபாயம் நிலவுகிறது. அருகில் உள்ள காப்புக்காட்டில் வசிக்கும் குரங்குகள், உணவு தானியங்களை தேடி, இந்த கிடங்கிற்கும் வந்து செல்கின்றன.
சுற்றுச்சுவரை ஒட்டி தொங்கும் இந்த மின் கம்பிகளால், வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயநிலை உள்ளது.
மின் கம்பிகளை பாதுகாப்பான உயரத்தில் துாக்கி நிறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.