கைபம்பு பயன்பாட்டுக்கு வருமா?
திருவாலங்காடு ஒன்றியம், வியாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது கணேசபுரம் கிராமம். இங்கு வீரராகவபுரம் செல்லும் சாலையை ஒட்டி கைபம்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் ஆதாரமாக இருந்த இந்த கைபம்பு, பல மாதங்களாக பயன்பாடின்றி பழுதடைந்து உள்ளது.
மேலும், புதர் மண்டி கைபம்பு இருக்கும் இடம் மறையும் நிலையில் உள்ளது. எனவே இந்த கைபம்பை பழுது நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.செல்வகுமார், கணேசபுரம்.