திருவள்ளூர்:தமிழகத்தில் '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்கள், சாலை விபத்து, கர்ப்பிணியர் உள்ளிட்ட பாதிக்கப்பட்டோரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 150 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. கடந்த 2022ல், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக சென்னையில் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை 1.17 லட்சம். அதில் பிரசவ சிகிச்சைகளுக்காக பயணித்த 7,656 பேர் கர்ப்பிணியர் பயன் பெற்றுள்ளனர்.
சாலை விபத்தில் சிக்கிய 9,927 பயன் பெற்றுள்ளனர். மேலும், 15 கர்ப்பிணியருக்கு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2022ல் 95 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 998 பேர் கர்ப்பிணியர். இதில், சாலை விபத்துக்குள்ளான 10 ஆயிரத்து 906 பேர் பயன் பெற்றுள்ளனர்.
மேலும் 80 பேருக்கு, 108 ஆம்புலன்ஸ்சில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது, என, திருவள்ளூர் மாவட்ட, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட திட்ட மேலாளர் எஸ்.சந்தீப்குமார் தெரிவித்துள்ளார்.