தடுப்புச் சுவர் இல்லாத தரைப்பாலம்
கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ளது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து கிளாய் வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் ஒன்றிய சாலையில், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வகையில் சிறிய தரைப்பாலம் உள்ளது.
இந்த வழியாக தினமும், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி பேருந்துகள், தொழிற்சாலை பேருந்து, மற்றும் கனரக வாகனம் என, 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
அந்த தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரைப்பாலத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
- எஸ்.பழனிவேல், வயலுார்.